உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ரேபேலி பகுதியை சேர்ந்த இன்று ரவி என்ற 30 வயது நபருக்கு திருமணம் நடைபெற இருந்தது. இந்த திருமணம் அமேதி நகர் பகுதியில் நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில் சில மணி நேரத்திற்கு முன்பாக ரவி திடீரென மண்டபத்தில் இருந்து வெளியேறினார். அவர் ஒரு ரயில்வே தண்டவாளத்திற்கு சென்று திடீரென ஒரு சரக்கு ரயில் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.