10 அணிகள் மோதும் 16வது ஐபிஎல் தொடர் இன்று இரவு 7:30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்குகிறது. இதில் முதல் போட்டியில் குஜராத் மற்றும் சென்னை அணிகள் மோதுகின்றன.  இந்நிலையில் பல்வேறு காரணங்களால் ஐபிஎல்-ல் சில வீரர்களால் பங்கேற்க முடியாமல் விலகும் சூழல் உருவாகியுள்ளது.

அதன்படி மும்பை அணியை சேர்ந்த பும்ரா, ரிச்சர்ட்சன் ஆகியோர் தொடரிலிருந்து முற்றிலுமாக விலகியுள்ளனர். சிஎஸ்கேவின் கைல் ஜெமிசன், முகேஷ் சவுத்ரி, பெங்களூரு அணியின் வில் ஜேக்ஸ், டெல்லியின் ரிஷப் பண்ட், பஞ்சாபின் ஜான்னி பேர்ஸ்டோ, ராஜஸ்தானில் பிரதீஸ் கிருஷ்ணா ஆகியோர் துர்த்தஸ்ட வசமாக விலகியுள்ளனர்.