
புதுச்சேரியில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. ஆளும் பாஜக மற்றும் என் ஆர் காங்கிரசுக்கு எதிராக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று பந்த் நடத்தப் போவதாக அழைப்பு விடுத்துள்ளன. குழந்தைகள் நல ஆணையம் செயல்படாததால் சிறுமி வழக்கில் விசாரணை மேற்கொள்ளப்படவில்லை என புகார் எழுந்தது. இதனால் குழந்தைகள் நல ஆணையம் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளது.