தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக 20 வருடங்களுக்கு மேலாக கலக்கிக் கொண்டிருப்பவர்தான் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி. கடந்த 1999 ஆம் ஆண்டு பள்ளி படிக்கும்போதே விஜய் டிவியில் அறிமுகமான இவர் முதன்முதலில் உங்கள் தீர்ப்பு என்ற நிகழ்ச்சியை தான் தொகுத்து வழங்கினார். தொகுப்பாளினியாக நுழைந்த உடனே பிரபலமான இவர் டப்பிங் கலைஞராகவும் சில வருடங்கள் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன் மற்றும் பாய்ஸ் வெர்சன் கேர்ள்ஸ் போன்ற நிகழ்ச்சிகளை அடுத்தடுத்து சூப்பராக தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இவருக்கு சின்னத்திரையில் தனி ஒரு வரவேற்பை கொடுத்த நிகழ்ச்சி தான் காபி வித் டிடி. சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என கொடிகட்டி பறந்த டிடி தற்போது அவ்வளவாக தொலைக்காட்சி பக்கம் வராதது மட்டுமே ரசிகர்களுக்கு சற்று வருத்தமாக உள்ளது. இப்படியான நிலையில் டிடி இன்று 40வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் இவருடைய சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க டிடி ரூ.4 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெற்று வரும் நிலையில் இவருடைய மொத்த சொத்து மதிப்பு 5 கோடி ரூபாய் வர இருக்கும் என கூறப்படுகிறது. இவர் சினிமாவை தாண்டி தனியாகவும் சொந்த தொழில் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.