
தமிழகம் முழுவதும் சென்னையில் உள்ள அசோக் நகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்திய மகாவிஷ்ணு என்பவரால் பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் மகாவிஷ்ணுவை கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகிறது. இதற்கிடையில் மற்றொரு சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மகாவிஷ்ணு ஆஸ்திரேலியாவுக்கு சென்று விட்டார். அவரை போலீசார் வலை வீசி தேடிவந்த நிலையில் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டதாக கூறப்பட்டது.
இதனையடுத்து மகாவிஷ்ணு நேற்று வீடியோ வெளியிட்டார். அவர் நான் எங்கும் ஓடி ஒழியவில்லை. நான் அப்படி என்ன தவறான கருத்து பேசி விட்டேன். நான் நாளை சென்னை வருகிறேன். காவல்துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து நேரடியாக வந்து விளக்கம் அளிக்கிறேன் என்று கூறினார். மேலும் அதன்படி இன்று மதியம் 1.10 மணிக்கு சென்னைக்கு மகாவிஷ்ணு வருகிறார். அவர் சென்னை வந்த பிறகு காவல்துறையினர் அவரை கைது செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.