தமிழகத்தில் வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு சார்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான இளைஞர்கள் பயனடைந்து வரும் நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் வருகின்ற ஆகஸ்ட் 18ஆம் தேதி காலை 10 மணி முதல் நண்பகல் 2 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை அனைத்து கல்வி தகுதி கொண்டவர்களும் பங்கேற்கலாம். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ராணிப்பேட்டை பிஎஸ்என்எல் அலுவலகம் என்ற முகவரிக்கு நேரில் வந்து கலந்து கொள்ளலாம் எனவும் மேலும் வேலை வாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களை அறிய என்ற இணையதள பக்கத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.