
தென் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இன்று மாலை 5 மணி வரை தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
அதன்படி கோவை, திண்டுக்கல், பெரம்பலூர், சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மாலை 5 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மேலும் இதேபோன்று நாளையும் தமிழகத்தின் சில மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.