கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பருவ மழை மற்றும் தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதன் பிறகு ஜூன் 1 முதல் ஜூன் 3 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோன்று நாமக்கல், திருச்சி, நீலகிரி, கோவை மாவட்டம் மலைப்பகுதிகள், ஈரோடு, சேலம், திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 9 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மேலும் ஜூன் 3ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசான மழையும், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக கனமழை பெய்யக்கூடிய இடங்களில் நிர்வாக ரீதியாக மஞ்சள் எச்சரிக்கை அன்றைய தினம் விடப்பட்டுள்ளது.