உலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். பல ஆயிரம் கோடி மதிப்புள்ள  திருப்பதியில் ஏழுமலையான் கோவிலை திருமலை தேவஸ்தானம் நிர்வாகம் செய்து வருகிறது. குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் திருப்பதியில் கூட்டம் அலைமோதும். இதனால் இலவச தரிசனம் செய்யும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் சூழல் ஏற்பட்டு வருகிறது. விஐபி தரிசனம் கட்டண தரிசனம் உட்பட பல்வேறு சிறப்பு தரிசனங்களுக்கும் அனுமதி அளித்து வருகிறது.

இந்நிலையில் திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் வழியாக சாமியை தரிசிக்க இன்று முதல் இலவச டோக்கன் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. வைகுண்ட ஏகாதசி, நாளை முதல் ஜன.1ஆம் தேதி வரை, 10 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கு, ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மற்றும் இன்று முதல் வழங்கப்படும் நேர ஒதுக்கீடு செய்த இலவச தரிசன டோக்கன் உள்ள பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்