ஸ்மார்ட்போன்களில் ஐபோன் வாடிக்கையாளர்கள் பலரும் விரும்பும் ஃபோனாக உள்ளது. iphone நிறுவனமும் ஒவ்வொரு series-ஆக புதுப்புது ஃபோன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி ஐபோன் பிரியர்கள் ஆவலுடன் காத்திருந்த ஐபோன் 16 விற்பனை இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த ஐபோன் 16-ஐ ஆயிரக்கணக்கானோர் இன்று அதிகாலை முதலே வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றுள்ளனர்.

இந்த ஐபோன் பிரியர்களில் குறிப்பிடும்படியாக ஒரு நபர் மொத்தம் ஐந்து ஐபோன்களை வாங்கியுள்ளார். தனக்கு தனது மனைவிக்கு குழந்தைகளுக்கு என அவர் 5 ஐபோன் வாங்கியது ஏதோ ஆஃபரில் அள்ளிச் சென்றது போல் தான் இருந்துள்ளது. தற்போது அந்த நபர் சமூக வலைதளத்தில் வைரல் ஆகியுள்ளார்.