ஷூ மற்றும் செருப்பு போன்ற காலணிகளின் விலை ஆகஸ்ட் 1 இன்று முதல் உயர உள்ளது. சந்தைகளில் விற்பனையாகும் காலணிகளுக்கு இந்திய தரநிலைப் பணியகம் சமீபத்தில் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டு இருந்தது. அதன்படி இன்று முதல் IS 6721 & IS 10702 வழிகாட்டுதல்கள் அமலுக்கு வருவதால் காலணிகளின் விலை உயர உள்ளது.

தயாரிப்பு பணிகளுக்கு அதிக செலவு ஏற்படும் என்பதால் விலை உயர்த்தப்படுவதாக காலணி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அத்தியாவசிய பொருள்கள் மட்டுமல்லாமல் இதர பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்து வருவது சாமானிய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.