கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் வசந்த்ராஜ். இவர் instagram மூலமாக +1 படிக்கும் மாணவி ஒருவருடன் பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் வளர்ந்த நிலையில் ஒரு கட்டத்தில் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி தனது நண்பர் வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.

அங்கு வந்த மாணவியிடம் வசந்த்ராஜ் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மூன்று நாட்கள் தனது நண்பர் வீட்டிலேயே மாணவியை அடைத்து வைத்து தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பின்னர் நடந்துவற்றை யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டல் விடுத்து மாணவியை அனுப்பி வைத்துள்ளார். வீட்டிற்கு வந்த மாணவி தனது தாயிடம் நடந்துவற்றை கூறி கதறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் நாகர்கோவில் அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் வசந்த்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். ஏற்கனவே வசந்த்ராஜ் மீது 2020 ஆம் ஆண்டு போக்சோ வழக்கு பதியப்பட்டது குறிப்பிடத்தக்கது.