கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகிய நேத்ராவதி (30) என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு கடந்த 13 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் 8 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.

இதில் ரமேஷ் லாரி ஓட்டுனராக இருக்கிறார். இவர்களுக்கு திருமணமான புதிதில் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்த நிலையில் கடந்த 2 வருடங்களாக குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது.

அதோடு ரமேஷ் லாரி ஓட்டுநர் என்பதால் வாரத்தில் மூன்று நாட்கள் வெளியே தங்கினார். இந்நிலையில் நேத்ராவதி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதில் ஆர்வமாக இருந்ததால் அவர் சமீப காலமாக ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இதைத்தொடர்ந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக அவர் திடீரென காணாமல் போய்விட்டார்.

அவரை கணவர் எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் நேற்று முன்தினம் அவர் சந்தோஷ் என்ற வாலிபரை திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் வெளியானது.

இதைப்பார்த்து ரமேஷ் அதிர்ச்சி அடைந்தார்‌. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக நேத்ராவதிக்கு சந்தோஷ் அறிமுகமானார். ஆனால் அதற்குள் அவருடன் பழக்கம் ஏற்பட்டு வீட்டை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டார். அதாவது அந்த வாலிபரை நேத்ராவதி காதலித்ததால் தன்னுடைய கணவன் மற்றும் மகனை தனியாக விட்டுவிட்டு அவரை திருமணம் செய்து கொள்ள விருப்பப்பட்டு வீட்டை விட்டு ஓடிவிட்டார்.

இது தொடர்பாக ரமேஷ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.