சென்னை விநாயகபுரம் பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அவர் ரீல்ஸ் செய்து  இன்ஸ்டாகிராமில் பதிவுவிடுவது வழக்கமாக கொண்டிருந்த நிலையில் இவருடைய வீடியோவிற்கு வாலிபர் ஒருவர் லைக்குகளை வாரி கொடுத்து வந்துள்ளார். அத்துடன் வாலிபர் பெண்ணை காதலித்து வந்துள்ளார். சென்னையில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்த வாலிபருக்கு பெண்ணுக்கும் இடையே காதல் முற்றிய நிலையில் இருவரும் கோவைக்கு ஓடி சென்றனர்.

இவர்களுடன் மாணவியின் தோழியும் சென்றிருந்தார். இதைத் தொடர்ந்து பதறிப்போன மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என்று புகார் கொடுத்திருந்தனர். இவர்கள் கொடுத்த புகாரின் பேரில் தேடி வந்த காவல்துறையினர் சந்தேகப்படும்படி கோவை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த காதலர்களை பிடித்தனர்.

அதன்பின் மாணவி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். அந்த வாலிபர் காவல் துறையினரால் எச்சரித்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் இன்ஸ்டாகிராமில் காதல் செய்து வாலிபருடன் கோவை வரை சென்ற மாணவியின் செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.