
திருப்பூர் வீரபாண்டி காவல் நிலையத்தில் முத்துசாமி என்பவர் போலீஸ்காரராக வேலை பார்க்கிறார். இவர் சிகரெட் பெட்டி, மது பாட்டில், தண்ணீர் ஆகியவற்றை வைத்துக்கொண்டு போதையில் போலீஸ் கமிஷனரிடம் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. அதில் அவர் கூறியதாவது, நேற்று டியூட்டியில் இருக்கும் போது ஒரு 100 கால் அட்டென் செய்து பிரச்சனையை சரி செய்தேன். இப்போது என் மனைவியை காணவில்லை. அதனால் மது குடிக்கிறேன். என் மகள் நன்றாக படித்து மெடல் வாங்கியுள்ளார்.
போலீஸ் ஸ்டேஷனில் போய் சொன்னேன். லீவ் லெட்டர் கொடுத்தும் இன்ஸ்பெக்டர் அம்மா எதுக்கு ஆப்சென்ட் போட்டாங்கன்னு எனக்கு தெரியல ஐயா என கூறியுள்ளார். மற்றொரு வீடியோவில் எனது மனைவி மகள்கள் கிடைத்து விட்டார்கள். மனைவியை கோபத்தில் அடித்து விடுவேன் என்பதற்காக என் அத்தை என் வீட்டில் உள்ளார்கள் என பேசியுள்ளார். அந்த வீடியோவும் சோசியல் மீடியாவில் வைரலாகி காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.