
சென்னையில் நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அந்த 15 வருடங்களில் பாலியல் ரீதியான சம்பவங்கள், ஜாதி மற்றும் மத ரீதியான தாக்குதல்கள் என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில் மாணவர்களுக்கு மன ரீதியான ஆலோசனைகள் வழங்கி அந்த குற்றத்தை தடுக்க வேண்டும்.
எடப்பாடி பழனிச்சாமி ஒரு சந்தர்ப்பவாதி. அவர் பாஜக உடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்தபோது தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியாக கொண்டாடினர். ஆனால் மீண்டும் தற்போது அமித்ஷாவுடன் சேர்ந்து கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிட்டதன் மூலம் ஊழல்களில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள பாஜகவிடம் அடமானம் வைத்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது என்று கூறினார்.
மேலும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக தனித்து போட்டியிட்ட நிலையில் அடுத்து வரும் 2026 தேர்தலில் இணைந்து போட்டியிட இருக்கிறார்கள். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் பாஜக உடன் கூட்டணி அமைத்ததால் அதிமுகவினர் சிலர் வருத்தத்தில் இருப்பதாக கூறப்படும் நிலையில் இதனை சில நிர்வாகிகள் வெளிப்படையாகவே கூறுகிறார்கள். மேலும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அதிமுக பாஜக கூட்டணியை விமர்சித்து வரும் நிலையில் தற்போது நடிகர் கருணாஸும் விமர்சித்துள்ளார்.