அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் நேற்று டெல்லியில் உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தனர். இந்த சந்திப்புக்குப் பிறகு உள்துறை மந்திரி அமித்ஷா  அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் அமையும் என்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தி ருந்தார். எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி தொடர்பாக 6 மாதத்திற்கு பிறகு பதில் சொல்கிறேன் என்று கூறிய நிலையில் அமித்ஷாவின் x பதிவு கூட்டணியை உறுதி செய்துள்ளது. இந்நிலையில் இன்று சட்டசபை கூட்டத்தொடருக்கு வந்த ஓ பன்னீர் செல்வத்திடம் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமித்ஷா சந்திப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் ஒரே வரியில் எல்லாம் நன்மைக்கே என்று பதில் அளித்துவிட்டு சிரித்தபடி அங்கிருந்து சென்று விட்டார். இதற்கு முன்னதாக ஓபிஎஸ் மற்றும் சசிகலா இருவரும் அதிமுகவில் இணைக்கப்படஇருப்பதாக தகவல் வெளியான நிலையில் அதனை எடப்பாடி பழனிச்சாமி மறுத்துவிட்டதோடு அவர்கள் இருவரையும் இணைக்க மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். அதே நேரத்தில் பாஜகவுடன் டிடிவி தினகரன் கூட்டணி வைத்துள்ள நிலையில் அவருடனும் அதிமுகவுக்கு சலசலப்பு நிகழ்கிறது. மேலும் இதன் காரணமாக பாஜக கூட்டணியில் எந்த கட்சிகள் நீடிக்கும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.