எடப்பாடி பழனிச்சாமி திமுகவை எதிர்ப்பதாகவும் திமுகவை எதிர்க்கும் கட்சிகள் அனைத்தும் ஒரு அணியில் திரள வேண்டும் என்றும் கூறினார். 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்று எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில் சமீபத்தில் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைப்பீர்களா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் சூழ்நிலையை பொறுத்து அது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று கூறினார். ஏற்கனவே அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இருந்த நிலையில் பின்னர் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது. இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் நேரத்தில் பாஜக உடனான கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றதால் மீண்டும் அந்த கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் பாஜக கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் எண்ணம் தான் பாஜகவின் ஆசை என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, திமுகவை எதிர்க்கும் கட்சிகள் ஒரு அணியில் திரள வேண்டும். திமுகவை தோற்கடிக்க அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று இபிஎஸ் கூறியது தான் எங்களுடைய விருப்பமும். பாஜகவும் தற்போது அதே மனநிலையில் தான் உள்ளது. எனவே பகையை மறைந்து அனைவரும் ஒன்றிணைந்து திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். மேலும் 2026 ஆம் ஆண்டு தேர்தல் வரை திமுக கூட்டணி நீடிக்காது என்றும் கண்டிப்பாக கூட்டணியில் விரிசல் ஏற்படும் என்று கூறினார்.