பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ள நிலையில் ராமேஸ்வரம் சென்றுள்ளார். அங்கு பாம்பன் பாலத்தை திறந்து வைக்கும் மோடி பின்னர் ராமநாதபுரம் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க அதிமுக முன்னாள் அமைச்சர் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது செங்கோட்டையன் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த நிலையில் சென்னைக்கு செல்வதாக நிர்வாகிகளிடம் கூறியுள்ளார்.

ஆனால் அவர் யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக காரில் ராமேஸ்வரம் கிளம்பியுள்ளார். ஏற்கனவே டெல்லிக்கு சென்று அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் சந்தித்த நிலையில் சென்னை வந்துள்ள நிர்மலா சீதாராமனை நேற்று மீண்டும் செங்கோட்டையன் சந்தித்தார். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க செங்கோட்டையன் கிளம்பியுள்ளார்.

பிரதமர் மோடியை தனித்தனியாக சந்திக்க இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் நேரம் கேட்டிருந்த நிலையில் ஓ பன்னீர் செல்வத்திற்கு மட்டும்  அனுமதி கொடுக்கப்பட்டதாகவும் எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் செங்கோட்டையன் பிரதமர் மோடியை சந்திப்பது பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

மேலும் ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்க வேண்டும் என்று பாஜக விரும்பும் நிலையில் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி முட்டுக்கட்டையாக இருப்பதால் அவருக்கு பதிலாக செங்கோட்டையன் தலைமையில் ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்க பாஜக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் செங்கோட்டையன் என்று போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.