
தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பாஜகவுடன் கூட்டணி வைக்க அரசியல் கட்சிகள் தவம் கிடப்பதாக கூறினார். அதாவது பாஜகவை தீண்டத்தகாத கட்சி, நோட்டோ கட்சி என்று விமர்சித்ததுடன் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் தான் தோல்வியடைந்தோம் என்று கூறியவர்கள் இன்று எங்களுடன் கூட்டணி அமைக்க தவம் இருப்பதாக கூறினார். இது பற்றி எடப்பாடி பழனிச்சாமி உட்பட அதிமுக தலைவர்களிடம் கேட்டபோது அண்ணாமலை எங்களைப் பற்றி சொல்லவில்லை என்று மழுப்பலாக பதில் கூறினர். ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி குறித்த கேள்விக்கு இன்னும் ஆறு மாதங்களுக்கு பிறகு பதில் சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதேபோன்று அண்ணாமலையும் அதிமுக எங்களுக்கு எதிரி கிடையாது என்று கூறியுள்ளார். இதனால் கிட்டத்தட்ட மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி என்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் அதிமுவகை விமர்சித்தது குறித்த சர்ச்சைக்கு தற்போது அண்ணாமலை விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது இபிஎஸ் சொன்னது சரிதான். அவர் சொன்ன கருத்தில் எந்த தப்பும் இல்லை. நான் கடந்த வெள்ளிக்கிழமை பாஜக கட்சியின் வளர்ச்சி மற்றும் எங்களுடைய அரசியல் பற்றி மட்டும் தான் பேசினேன். நான் அதிமுகவை பற்றி பேசவோ அல்லது விமர்சிக்கவோ இல்லை. இதைத்தான் எடப்பாடி பழனிச்சாமியும் கூறி இருக்கிறார். மேலும் நான் அதிமுகவை பற்றி பேசாத போது வெறும் விவாதத்திற்காக இதனை யாரும் திரித்து கூறக்கூடாது என்றார்.