ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த இடைத்தேர்தல் முடிவடைந்த பிறகு மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக இருக்கிறார். அதன் பிறகு தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிடும் நிலையில் அதிமுக சார்பில் கே.எஸ் தென்னரசு வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அதிமுக கட்சிக்கு ஆதரவாக டாக்டர் கிருஷ்ணசாமி பரப்புரை செய்தார். அப்போது இடைத்தேர்தல் என்றால் அரசு எந்திரம் விளையாடும் என தெரிந்தும் தாமாகவிடம் தொகுதியை கேட்டு வாங்கி ஈரோடு கிழக்கில் நிற்கும் இபிஎஸ் தைரியம் எங்கே?. காங்கிரசுக்கு தகுதியை கொடுத்துவிட்டு அவர்கள் பின்னால் மறைந்திருக்கும் ஸ்டாலினின் தைரியம் எங்கே என்று கேள்வி எழுப்பினார். மேலும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் உறுதியாக வெற்றி பெறும் என்றும் கூறினார்.