சென்னை மாவட்டத்தில் உள்ள வண்டலூர் வெளிவட்ட சாலையில் வரதராஜபுரம் அருகே சாலையோரம் ஒரு லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் தாமஸ் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தாமஸின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் லாரி ஓட்டுனரான லோகநாதன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.