
கன்னுஜ் மாவட்டத்தில் உள்ள தல்கிராம் காவல் நிலைய எல்லையில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
ஒரு சலூன் ஊழியர் வாடிக்கையாளருக்கு மசாஜ் செய்யும் போது தனது உமிழ்நீரை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ ஆகஸ்ட் 7 அன்று வெளியாகியுள்ளது. வீடியோவில், ஊழியர் வாடிக்கையாளருக்கு மசாஜ் செய்து கொண்டிருக்கும் போது, தனது ஒரு கையை உமிழ்ந்துவிட்டு மீண்டும் மசாஜ் செய்வது தெரிகிறது.
இதையெல்லாம் வாடிக்கையாளர் அறியாமலேயே அவரின் மீது கொண்ட நம்பிக்கையின் அடிப்படையில் கண்கள் மூடி உட்காந்திருந்தார். இதனால் வாடிக்கையாளருக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது.. இதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்..
இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து கன்னுஜ் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தல்கிராம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
कन्नौज :
➡️सैलून कर्मी मसाज करते हुए युवक का थूक लगाकर किया मसाज
➡️तालग्राम थाना क्षेत्र के नगर क्षेत्र का मामला.#Kannauj #viral2024@Uppolice @kannaujpolice pic.twitter.com/L02KhTo5E5
— Abhi (journalist ) (@Abhikumarlive) August 7, 2024
“>