
அமெரிக்கா நாட்டின் நியூ ஜெர்சி மாகாணத் வசித்து வருபவர் ஜென்னா சினாட்ரா. 21 வயதான இவர் திடீரென்று ஒரு நாள் தீவிரமாக கொட்டாவி விட்ட போது அவருடைய வாய் தாடை மூடாமல் அப்படியே திறந்த நிலையில் நின்றுள்ளது. இதனால் அதிர்ச்சடைந்த அந்த பெண் தன்னுடைய வாயை இயல்பான நிலைக்கு கொண்டு வருவதற்கு மருத்துவரை அணுகியுள்ளார் .
பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் சிகிச்சை செய்யும் ஒரு நிபுணரை நாடி இருக்கிறார் . பின்னர் அவருடைய உதவி மூலமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவருடைய வாய் இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.