ரஷ்யாவை சேர்ந்த டிமிட்ரி யுகின் என்பவர் ஒரு பூனையை வளர்த்து வந்தார். இவருக்கு 55 வயது ஆகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இவரது வளர்ப்பு பூனை காணாமல் போனது. அந்த பூனையை டிமிட்ரி தேடி கண்டுபிடித்தார். இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக அந்த பூனை டிமிட்ரியின் உடலில் கீறியது. அவருக்கு ஏற்கனவே நீரிழிவு நோய் உள்ளிட்ட பல உடல்நல பிரச்சனைகள் இருந்தது.

மேலும் உடலில் ரத்தம் உறைதல் குறைவாக இருந்ததால் பூனை ஏற்படுத்திய சிறிய காயம் அவரது உயிருக்கே ஆபத்தாக முடிந்தது. ரத்தம் நிற்காமல் வந்ததால் டிமிட்ரி மருத்துவ உதவியை நாடினார். ஆனால் மருத்துவ குழு வருவதற்குள் துரதிஷ்டவசமாக அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.