நடிகை ஓவியா தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும் தனக்கு மார்க்கெட் குறைந்த நேரத்தில் தான் பிக் பாஸ் சீசன்-1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர் தைரியமாக பேசும் விதத்தை பார்த்து அவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் கிடைத்தனர். அவருக்காக ஓவியா ஆர்மி, ஓவியா நேவி என அவருடைய ரசிகர்கள் ஆரம்பித்தனர். பிக் பாஸில் இருந்து வந்தபிறகு ஓவியா சினிமாவில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்த்த போதும் அவர் படங்களில் அதிகம் நடிக்கவில்லை. ஆனால் ட்விட்டரில் மட்டும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் சொல்ல வேண்டிய இடத்தில் ‘No’ சொல்ல தெரிய வேண்டும், இல்லை என்றால் நம்மிடம் எல்லை மீறத்தான் செய்வார்கள் என நடிகை ஓவியா ஓபனாக கூறியுள்ளார். சமீபத்தில் பேசிய அவர், “சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சினை எப்போதுமே இருக்கிறது. சினிமா இவ்வளவு வளர்ச்சி அடைந்துவிட்டது. ஆனால் இந்த பிரச்சினை மட்டும் ஓயவில்லை. சினிமா பாதுகாப்பான துறைதான். ஆனால் நம்மை நாமே தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.