பாலிவுட்டில் பிரபலமான நடிகை தான் ஜாக்குலின் பெர்னாண்டஸ். இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் சிறைக்குச் சென்ற சுகேஷ் சந்திரசேகர் என்பவரை காதலித்து வருவதாக பல செய்திகள் வெளிவந்தது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே இருவரும் ஒன்றாக நெருக்கமாக எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களும் வெளியாகி இவர்களுடைய காதலை வெளியுலகிற்கு காட்டியுள்ளது. இருந்தாலும் தங்களுடைய காதல் உறவு குறித்து இவர் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றார்.

இப்படியான நிலையில் காதலர் தினமான நேற்று சுகேஷ் தனது காதலிக்கு சிறப்பு பரிசு ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது சிறையில் இருந்து கொண்டே பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஜெட் விமானம் ஒன்றை தான் அவர் தன்னுடைய காதலிக்கு காதல் பரிசாக வழங்கியுள்ளார். அதேசமயம் அன்போடு தன் காதலிக்கு அவர் எழுதிய கடிதத்தில், அன்பே ஜாக்கி, நான் உன்னை இப்போது பைத்தியம் போல காதலிக்கின்றேன். நமக்கு காதலர் தினம் என்பது மிகவும் முக்கியம். இந்த நாளில் தான் நம்முடைய உறவு தொடங்கியது என்று அவர் பதிவிட்டுள்ள நிலையில் தற்போது அவர் தனது காதலிக்கு விலை உயர்ந்த பரிசை வழங்கியது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.