பொதுவாக குரங்கு என்றாலே சேட்டை செய்யும் என்று தான் நமக்கு தோன்றும். ஏனெனில் மரத்துக்கு மரம் தாவிக் கொண்டு கையில் ஏதாவது பொருள் வைத்திருந்தால் அதை பறித்துக் கொண்டு விடும். இப்படி குரங்கு என்றாலே படு சேட்டையாக இருக்கும். அப்படி இருக்கையில் வீட்டு வேலை செய்யும் குரங்கை நீங்கள் பார்த்துள்ளீர்களா. ஆம் அது உண்மைதான். இங்கு ஒரு குரங்கு அனைத்து வகையான வீட்டு வேலைகளையும் செய்கிறது. அதாவது உத்திரபிரதேச மாநிலத்தில் சத்வா என்ற கிராமம் உள்ளது.

இங்கு விவசாயி ஆன விஸ்வநாத் என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர்கள் தங்கள் வீட்டில் செல்ல பிராணியாக ஒரு குரங்கை வளர்த்து வரும் நிலையில் அந்த குரங்கு பாத்திரம் கழுவுகிறது சப்பாத்தி மாவு தேய்த்து சப்பாத்தி போடுகிறது. அந்த குரங்கு விஸ்வநாதன் மனைவியான ராணியுடன் சேர்ந்து வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்கிறது. இதனை அவருடைய மகன் ஆகாஷ் வீடியோவாக பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.