கேரளா மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் மேரி இவர் கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து சென்றார். இந்த நிலையில் மூதாட்டி தனியாக வருவதை பார்த்த மர்ம நபர் ஹெல்மெட் அணிந்தபடி ஸ்கூட்டியில் வந்தார். அவர் மூதாட்டியிடம் முகவரி கேட்பது போல நடித்துள்ளார். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் மூதாட்டியின் சங்கிலியை பறித்து விட்டார். இதனால் மேரி நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். ஆனாலும் சுதாரித்துக் கொண்டு அந்த நபர் வந்த ஸ்கூட்டியை பிடித்து இழுத்தார். இருப்பினும் மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றார்.

அந்த மூதாட்டி அணிந்திருந்தது தங்க நகை கிடையாது. கவரிங் நகை தான். இந்த விவகாரம் குறித்து மேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா கட்சிகளின் அடிப்படையில் இப்ராஹிம்(41) என்பவரை கைது செய்தனர். இவர் பல்வேறு இடங்களில் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.