
உத்திரபிரதேச மாநிலத்தில் கல்யாண வீட்டில் ஏர் கூலர் பக்கத்தில் யார் உட்காருவது? என்று மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் இடையே சண்டை ஏற்பட்டதில் கோபத்தில் மணப்பெண் திருமணத்தை நிறுத்தி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நேர பேச்சுவார்த்தை நடத்தியும் மணப்பெண் சமாதானம் ஆகவில்லை.
இப்போதே சண்டை என்றால் மாமியார் வீட்டில் என்னவெல்லாம் சண்டை நடக்கும் என்று கூறி அந்த பெண் பிடிவாதம் பிடித்துள்ளார். பின்னர் காவல்துறையினர் வந்து தலையிட்டு முடிவு எடுப்படாததால் அமைதியை குலைத்ததாக இரு வீட்டருக்கும் 151 ரூபாய் அபராதம் விதித்து அனுப்பி வைத்துள்ளனர் காவல்துறையினர்.