உத்திரபிரதேசம் லக்னோவில் ராகுல், அனிதா எனும் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் இடையில் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரக்க்ஷா பந்தன் பண்டிகை நாளன்று தனது சகோதரனுக்கு ராக்கி கயிறு கட்ட அனிதா விரும்பியுள்ளார்.

இதனால் தனது பெற்றோர் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று அனிதா கேட்டுள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் கணவன், அனிதாவின் மூக்கை வெட்டியுள்ளார்.

இதையடுத்து  ரத்த வெள்ளத்தில் கிடந்த அனிதாவை ராகுலின் சகோதரன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின் ஆபத்தான கட்டத்தை கடந்த அனிதா தனது கணவனின் கொடூரமான செயலை குறித்து கூறினார். மேலும் தனது கணவன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.