
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “துணிவு”. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதிசங்கர், ஜான் கொக்கன் போன்றோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இதையடுத்து விக்னேஷ் சிவன் டைரக்டு செய்யும் ஏகே-62 திரைப்படத்தில் அஜித் நடிக்க இருக்கிறார்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தின் சூட்டிங் வருகிற மே மாதம் தொடங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விக்னேஷ்சிவன் தன் சமூகவலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “என்னுடைய அடுத்த பெரிய வாய்ப்பான ஏகே 62ல் தற்போது கவனம் செலுத்துகிறேன்.

இந்த பெரிய பொறுப்பை அளித்த அஜித், லைகா தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி. சுவாரசியமான புத்தாண்டை எதிர்நோக்கி இருக்கிறேன். வாழ்க்கையில் சிறிய விஷயங்கள் தான் நம்மை மகிழ்ச்சியாக்குகிறது. அவற்றில் கவனம் செலுத்தி மகிழ்ந்திருங்கள். பெரிய விஷயங்கள் தானாக வந்து விழுந்து விடும்” என பதிவிட்டுள்ளார். இப்பதிவு தற்போது வைரலாகி வருகிறது..
View this post on Instagram