இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டதால் எந்த மூலையில் என்ன சம்பவம் நடந்தாலும் அதனை உடனே வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வைரலாக்கி விடுகிறார்கள். இது போன்ற வீடியோக்கள் சில சமயங்களில் சிரிக்க வைப்பதாகவும் சில சமயங்களில் ஆச்சரியப்பட வைப்பதாகவும் இருக்கும். அந்த வகையில் அர்ச்சகர் ஒருவர் பிரேக் டான்ஸ் ஆடிய வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட அது மிகவும் வைரலாகி வருகிறது.

அதாவது ஆந்திர மாநிலம் ஸ்ரீகா குளம் பகுதியில் வாசுதேவ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் தேர் திருவிழாவின் போது அங்குள்ள அர்ச்சகர்கள் டான்ஸ் ஆடியுள்ளனர். அதிலும் ஒரு ஐயர் பிரேக் டான்ஸ் ஆடினார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.