அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசா விண்வெளி பற்றிய பல ஆராய்ச்சிகளை செய்து வருவதோடு புதுப்புது உண்மைகளை தன்னுடைய தொழில்நுட்பத்தின் மூலமாக வெளியிட்டு வருகிறது. தற்போது சீனா, பூடான் நாடுகளை ஒட்டிய இமயமலை பகுதியில் சிவப்பு மற்றும் பிங்க் நிற வண்ணத்தில் மின்விளக்கு அமைத்தது போன்று காட்சி வெளியாகியிருக்கிறது. இந்த ஒலிச் சிதறல்கள் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது  என்று நினைத்து விட வேண்டாம்.

அதாவது வானத்திலிருந்து விண்ணிற்கு வந்த மின்னல்கள் அலங்கரித்ததாகவும் இதை நாசா படம்பிடித்து வீடியோவாக வெளியிட்டுள்ளது.  இதுவரை இல்லாத வகையில் 21ஆம் நூற்றாண்டில் இந்த நிகழ்வு நடந்துள்ளதோடு இடியோடு மின்னல் அடிக்கும் போது பூமியின் அயனோஸ்பியர் வளிமண்டல அடுக்குகளில் ஏற்படும் சூரிய கதிர்வீச்சுகளாலும் காஸ்மிக் கதிர்வீச்சாலும் இந்த வண்ணக் குழம்புகளால் ஏற்பட்ட வானில் ஒளி திரளான மின்னல்களை அவை இறங்கும் காட்சி உருவாகி இருக்கிறது என்று நாசா விளக்கம் அளித்துள்ளது.