இமாச்சல் பிரதேசத்தில் உள்ள குல்லு என்ற பகுதியில் தற்போது பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது அந்த பகுதியில் உள்ள மணிகாரா குருத்வாரா பார்க்கிங் அருகே நிலச்சரிவு ஏற்பட்டு மரங்கள் சாய்ந்து விழுந்தது.

இதில் தான் 6 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இந்த விபத்தில் ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்த பகுதியில் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.