
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் வம்சி இயக்கத்தில் நடித்த வாரிசு படம் கடந்த 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் படம் இயக்குவதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம். தற்போது விஜயின் மகன் விசுவல் கம்யூனிகேஷன் படித்து வரும் நிலையில், சில குறும்படங்களை இயக்கியுள்ளார். அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு குறும்படத்தை ஜேசன் சஞ்சய் இயக்குகிறார்.
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் தமிழ் சினிமாவிற்கு கூடிய விரைவில் ஒரு நல்ல இயக்குனர் கிடைப்பார் என்று பாராட்டி வருகிறார்கள். மேலும் பிரேமம் படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் நடிகர் விஜயின் மகனுக்காக ஒரு கதையை எழுதிய நிலையில் தனக்கு தற்போது நடிப்பதில் ஆர்வம் இல்லை என்றும் படம் இயக்குவதில் தான் ஆர்வமாக இருக்கிறேன் என்றும் ஜேசன் சஞ்சய் கூறிவிட்டதாக விஜய் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

SAC – Director , #ThalapathyVijay – Actor , Now Sanjay – Director.
Director Jason Joseph Sanjay 💥 pic.twitter.com/D2zqz9xkHm
— Shankar (@Shankar018) January 27, 2023