ஜெய் பீம் படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் நடிகராக களம் இறங்கிய மணிகண்டன் அதனைத் தொடர்ந்து குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவரது நடிப்பில் நேற்று வெளியான குடும்பஸ்தன் திரைப்படம் பாராட்டுக்களை குவித்துள்ளது.

இந்நிலையில் மணிகண்டன் புதிய பாதையை தேர்ந்தெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மணிகண்டன் விஜய் சேதுபதியை வைத்து படம் ஒன்றை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. தன்னிடம் இருந்த கதை ஒன்றை விஜய் சேதுபதியிடம் கூற அவரும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனால் கூடிய விரைவில் இவர்கள் இருவரது கூட்டணியில் படம் ஒன்று தயாராக இருக்கிறது ஏற்கனவே விக்ரம் வேதா மற்றும் விசுவாசம் படத்திற்கு மணிகண்டன் தான் ஸ்கிரிப்ட் ரைட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.