இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் இயற்கையின் அதிசயங்கள் நிறைந்த வீடியோக்கள் மிகவும் அற்புதமாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு இடத்தில் பறவைகளும் மீன்களும் பறவைகளுக்கு பெரிய இரும்பு டிராயில் தானியங்கள் இருக்கிறது. சில பறவைகள் அதனை உண்ணும் நிலையில் ஒரு பறவை மட்டும் அந்த டிராலியில் இருந்து தானியங்களை எடுத்து அருகே தண்ணீரில் உள்ள மீன்களுக்கு வாயில் ஊட்டி விடுகிறது.

 

இந்த வீடியோவை பார்க்கும் போது மிகவும் அற்புதமாக இருக்கிறது. அந்தப் பறவைக்கு மீன்களுக்கும் இருக்கும் அன்பு எவ்வளவு அளப்பரியது. பொதுவாக பறவைகள் மீன்களைப் பிடித்து சாப்பிடும். ஆனால் அவ்வளவு பெரிய மீன்களுக்கு அந்த பறவை அன்போடு சாப்பாடு ஊட்டி விடுகிறது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருவதோடு லைக்குகளையும் குவித்து வருகின்றனர்.