இரட்டை இலை சின்னத்தையும் அதிமுக பெயரை பயன்படுத்தக் கூடாது என்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு உச்சநீதிமன்றம் இன்று காலை உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து,  மக்களவை தேர்தலில் அதிமுக (ஓபிஎஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதி கோரி தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுக கட்சி சார்பாக Form A மற்றும் B படிவங்களில் கையெழுத்திட்டு இரட்டை இலைச் சின்னத்தை வேட்பாளர்களுக்கு வழங்கும் அதிகாரத்தை தனக்கு வழங்க வேண்டும். அல்லது அதிமுக (ஓபிஎஸ்) என்ற பெயரில் மக்களவைத் தேர்தலில் நிற்க அனுமதிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு அளித்துள்ளார்.