ஹரியானா மாநிலத்தில் கடந்த மே 30ஆம் தேதி அன்று பூஜா என்ற பெண்ணிற்கு மருத்துவமனையில் இரட்டை பெண் குழந்தை பிறந்துள்ளது .இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் அவருடைய தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு பூஜாவின் கணவர் நீரஜ் குழந்தைகளோடு பின் தொடர்ந்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில் திடீரென்று குழந்தைகள் காணாமல் போய் உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த  குழந்தைகள் தாய் பூஜா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்த காவல்துறையினரின் விசாரணையில் பூஜாவின் கணவர் நீரஜ் குழந்தைகளை டெல்லிக்கு அருகே  ஒரு பகுதியில் உயிரோடு புதைத்துள்ளார். மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதில் தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்று விரும்பிய அவர் பெண் குழந்தைகள் பிறந்தது ஏற்றுக்கொள்ள முடியாமல் கொலை செய்ததாக தெரியவந்துள்ளது.