
கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சந்தோஷ்-சரண்யா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சந்தோஷ் பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் விடும் வேலை பார்த்து வந்தார். கடந்த மார்ச் மாதம் 17ஆம் தேதி முத்தூர் பகுதியில் ஒரு வீட்டில் பாம்பு பிடிக்க சென்றபோது அங்கு பாம்பு கடித்தது. உடனே அங்கிருந்தவர்கள் சந்தோஷை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சந்தோஷ் உயிரிழந்தார்.
இது குறித்து சந்தோஷ் மனைவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் பாம்பு பிடி வீரரான எனது கணவர் சந்தோஷ் கடந்த மாதம் பாம்பு பிடிக்க சென்ற இடத்தில் பாம்பு கடித்து இறந்துள்ளார். அவரது வருமானத்தை நம்பி மட்டுமே எங்கள் குடும்பம் இருந்தது. எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் இறந்த பிறகு என்னால் குடும்பத்தை நடத்துவதற்கு சிரமமாக உள்ளது. அதனால் தமிழக அரசு எங்கள் குடும்பத்தின் மீது கருணை காட்டி நிதி உதவி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.