
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தைகள் இரவு நேரத்தில் பூஜை அறையில் சாமி கும்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்து ஆத்திரம் அடைந்தார். இதனால் அவர்களை உயிருடன் எரிக்க முடிவு செய்து மனைவி மற்றும் குழந்தைகளின் மீது பெட்ரோலை வீசியுள்ளார்.
அப்போது பூஜை அறை விளக்கிலிருந்து தீ நான்கு பேர் மீது பற்றி கொண்ட நிலையில் இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.