உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவின் கேராகர் பகுதியில், 12 வயது தலித் சமூகத்தை சேர்ந்த சிறுமி, அவரது வீட்டிலிருந்து கடத்தப்பட்டு, அருகிலுள்ள ஒரு மதத்தலத்தின் சுவர் பின்புறம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சியான சம்பவம் வெளியாகியுள்ளது. கடந்த இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது இந்தக் குற்றம் நடந்ததாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் கூறியதாவது,, குற்றவாளி அவளை தனிமையான இடத்திற்கு தூக்கிக்கொண்டு சென்று, படுக்கைதுணியை கழற்றி, அவள் எதிர்ப்பை மீறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமி கூச்சலிட முயன்றபோது, குற்றவாளி அவளது வாயை அடைத்து, கையால் தாக்கியுள்ளார். பின்னர் குற்றவாளி இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

 

அடுத்த நாள் காலை, கோயில் அருகே இரத்தத்தின் தடங்கள் காணப்பட்டதையடுத்து, அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் போலீசாரை அழைத்தனர். அருகிலுள்ள சிசிடிவி வீடியோக்களில், குற்றவாளி சிறுமியை தூக்கிச் செல்வது தெளிவாக பதிவாகியிருந்தது. இதன்மூலம் குற்றவாளியின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆக்ரா மேற்கு பகுதி போலீஸ் கண்காணிப்பாளரும் சம்பவ இடத்தை பார்வையிட்டுள்ளார். தற்போது குற்றவாளியை பிடிக்க விசாரணை மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி குற்றம் நடந்த பின் தன் வீட்டிற்கு அழுது கொண்டே சென்றதோடு பெற்றோரிடம் அனைத்து விஷயங்களையும் கூறிய நிலையில் அவர்களும் புகார் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.