திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இருந்து கல்வாரிப்பட்டி சிங்கிலிக்காம்பட்டிக்கு கடந்த ஜூன் 12ஆம் தேதி அரசு பேருந்து ஒன்று சென்றது. பேருந்தை ஓட்டுநர் வேடசந்தூர் கிளையில் பணியாற்றும் காசிராஜன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இதனிடையே அன்று இரவு கர்ப்பிணி ஒருவர் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்து ஏற முயன்ற போது ஓட்டுநர் ஏற்றாமல் சென்றுள்ளார்.

அதனைப் போலவே இலவசமாக பயணிப்பதால் பேருந்து நிறுத்தத்தில் நின்ற சில பெண்களையும் ஏற்றாமல் அவர் பேருந்தை நகர்த்தியுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து ஓட்டுநர் மீது நடவடிக்கை பாய்ந்து உள்ளது. மாநகர பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கலாம் என அரசின் திட்டம் அமலில் இருக்கும் போது இது போன்ற சம்பவங்கள் மக்களை கடும் கோபத்தில் ஆழ்த்தி வருகிறது.