
சென்னை கொளத்தூர் பவானி நகரில் ராஜசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்தார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். தீபாவளி அன்று ராஜசேகர் மது போதையில் வீட்டிற்கு வந்து தூங்கினார். இரவு நேரம் சித்ரா தனது கணவரை எழுப்ப முயன்றும் அவர் எழுந்திருக்கவில்லை என கூறப்பட்டது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தபோது ராஜசேகர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் ராஜசேகர் களத்தின் வலது பக்கத்தில் காயம் இருப்பது தெரியவந்தது. இதனால் போலீசார் சித்ராவிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது சித்ராவும் ராஜசேகர் ஓட்டும் லாரியின் உரிமையாளரான தனசேகர் என்பவரும் நெருக்கமாக பழகியுள்ளனர். இருவருக்கும் தகாத உறவு ஏற்பட்டது. தீபாவளி அன்று இரவு தன தனசேகர் வீட்டிற்கு வந்துள்ளார். இதனை பார்த்து கோபத்தில் ராஜசேகர் தனது மனைவியை கண்டித்தார். இதனால் கோபத்தில் சித்ராவும் தனசேகரன் இணைந்து ராஜசேகரன் கழுத்தை நெரித்து கொன்று போதையில் இறந்து விட்டதாக நாடகமாடியது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.