
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கட்டிட வேலை பார்க்கும் ஒருவர் வசித்து வருகிறார். அவரது மனைவிக்கு 39 வயது ஆகிறது. இந்த தம்பதிக்கு நான்கு மகள்கள் இருக்கின்றனர். மூன்று மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. ஒரு மகள் மாற்றுத்திறனாளி. இந்த நிலையில் கட்டிட தொழிலாளியின் மனைவிக்கும் வேறு ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாகவும், வேலைக்கு சென்று வந்த பிறகு அந்த நபரை தனிமையில் சந்திப்பதாகவும் அவரது கணவருக்கு தகவல் கிடைத்தது.
இதனால் கட்டிட தொழிலாளி தனது மனைவியை ரகசியமாக கண்காணித்தார். இந்த நிலையில் வெளியூர் வேலைக்காக சென்ற கட்டிட தொழிலாளி தனது மனைவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட போது பிஸியாகவே இருந்துள்ளது. இதனால் கோபமடைந்த தொழிலாளி மனைவியை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என முடிவு செய்தார்.
வெளியூரிலிருந்து ஊருக்கு வந்து வீட்டிற்கு செல்லாமல் அருகில் இருக்கும் பகுதியில் மறைந்து இருந்துள்ளார். இரவு 10:30 மணிக்கு அவரது மனைவி நைசாக வீட்டை விட்டு வெளியே சென்றதை பார்த்த தொழிலாளி அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது அருகில் இருக்கும் வாழை தோப்புக்குள் நுழைந்து அந்த பெண் தனது ஆண் நண்பருடன் மது குடித்துவிட்டு உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் கோபமடைந்த தொழிலாளி இருவர் மீதும் கற்களை வீசினார். ஆண் நண்பர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
அந்தப் பெண்ணின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. ஆனாலும் கோபம் அடங்காமல் தொழிலாளி ஆண் நண்பரின் பைக்கில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டார். இந்த சத்தம் கேட்டு ஓடிவந்த கிராம மக்கள் படுகாயத்துடன் கிடந்த அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கட்டிட தொழிலாளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.