
இராமநாதபுரம் மாவட்டம் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்..
தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் மற்றும் உள்வட்டம் மாயா குளம் பகுதியில் நேற்று (14.08.2023) மதியம் அரசு பேருந்தும், தனியார் வாகனமும் எதிர்பாராத விதமாக மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து நிலை தடுமாறி சென்ற போது ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்தில் இருந்த இரண்டு பெண்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு#CMMKSTALIN #TNDIPR@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/zwwwFg0urX
— TN DIPR (@TNDIPRNEWS) August 15, 2023