மும்பையில் இளம் பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் பரபரப்பான சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதது விதத்தில் அவர் அணிந்திருந்த துப்பட்டா இருசக்கர வாகனத்தில் சிக்கியது. இதைத் தொடர்ந்து அந்த பெண்ணின் கழுத்தை துப்பட்டா நெரிக்கப்பட்டதை உணர்ந்த அவர் இருசக்கர வாகனத்தை நிறுத்தினார். அதன்பின் அருகில் உள்ளவர்களின் உதவியோடு துப்பட்டாவை வெளியே எடுத்துள்ளார்.

இந்த விபத்தால் அந்த பெண்ணிற்கு கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த பெண் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த சம்பவத்தை பற்றியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோவில் “பெண்கள் பைக் ஓட்டும் போது துப்பட்டா அணிய வேண்டாம்” என்ற தலைப்போடு அவர் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவானது அவரது இருசக்கர வாகனத்தின் முன்புறம் பொருத்தப்பட்டிருந்த செல்போன் கேமராவில் பதிவாகியுள்ளது.