
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் லியோ திரைப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர்கள் அர்ஜுன், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின், நடிகைகள் திரிஷா, மடோனா செபாஸ்டியன், தயாரிப்பாளர் லலித் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் நடிகர் விஜய் பல விஷயங்கள் குறித்து பேசினார்.
இந்நிலையில் நடிகர் விஜய்யை ப்ளூ சட்டை மாறன் பங்கமாக கலாய்த்துள்ளார். அதாவது, நேற்று நடைபெற்ற லியோ வெற்றி விழாவில் விஜய், காகம், கழுகு, யானையை வைத்து ஒரு குட்டிக்கதை கூறியிருந்தார். அந்த கதையே நான் 5 வருடங்களுக்கு முன்னதாக வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பட விமர்சனத்தின் போது கூறியதுதான். அதே கதையை விஜய் தற்போது ஜெராக்ஸ் எடுத்து கூறியுள்ளார் என்று தனது X பக்கத்தில் கலாய்த்துள்ளார்