வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் முருகன் என்ற 48 வயது நபர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி அன்பழனி (45) என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் கணவன் தன் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார்.

அதன்படி முருகன் தன் மனைவியை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய திட்டமிட்டு வீட்டின் இரும்பு கேட்டில் மின்சாரத்தை பாய்ச்சி தரையில் தண்ணீர் ஊற்றி வைத்துள்ளார். இவருடைய மனைவி கதவை திறந்த போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.

இதில் அன்பழனிக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கிறார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அவர் மூன்று முறை தன் மனைவியை இதேபோன்று மின்சாரம் பாய்ச்சி கொலை செய்யும் முயன்றது தெரிய வந்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முருகனை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.